Wednesday, September 5, 2012

கி.வா.ஜ


கி.வா. என்றழைக்கப்பட்ட கி.வா.ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் சமயச்சொற்பொழிவாளர். இவர் தமிழ் தாத்தா  .வே.சாமிநாதய்யரின் மாணாக்கராவார். இவர்கலைமகள்என்ற இலக்கிய இதழை நடத்தி, பல புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

1967இல் இவரதுவீரர் உலகம்என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி.வா. பரிசை நிறுவி வழங்கி வருகிறது. இவரின் பல நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இவர் சொல்லின் செல்வராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் சிலேடை புலியாகவும் இருந்தார் என்பதற்கு சாட்சிசிரிக்க வைக்கிறார் கி.வா.என்ற புத்தகம். இது, வாகீச கலாநிதி திரு.கி.வா.ஜகன்னாதன் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற வேடிக்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு. நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, சில சிலேடைக்கவிதைகளையும் உள்ளடக்கியது. அவற்றிலிருந்து சில சுவையான நிகழ்ச்சிகள் இதோ உங்களுக்காக:
1. புடவையின் சிறப்பு...
ஒரு நண்பர் வீட்டிற்குக் கி.வா.. சென்றார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெய்யில் படுகிற வகையில் வசதியான இடம் அந்த வீட்டில் இருக்கவில்லை.
வாசல் பக்கத்தில்தான் வெய்யில் அடித்துக் கொண்டிருந்தது. நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து வெய்யில் படும்படியாகத் துவைத்த புடவையை அதன் மேல் காயப் போட்டிருந்தார். புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா..,
'இது என்ன புடவை தெரியுமா?' என்று நண்பரைக் கேட்டார்.
'ஏன் சாதாரணப் புடவைதானே?' என்றார் நண்பர்.
'அல்ல இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. இதுதான் உண்மையான வாயில் புடவை!' என்றார் கி.வா..
2. வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா..வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா..
குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்என்று பாராட்டிவிட்டு, அவரிடம்நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
வண்ணாரப்பேட்டையிலிருந்துஎன்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா..
அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
3.  உப்புமா    குத்துகிறதா
*குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா..
'உப்புமாவைத் தின்ன' முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' என குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.
கி.வா.. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார்பிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.
ஏன் என்று அந்த அம்மா கேட்டார். 'ஊசி இருக்கிறது' என்று கூறிச் சிரித்தார் கி.வா..!
4. இம்மை - மறுமை
கி.வா. அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா. உடனேஇம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.
5.  தலைவனை பையனாக...?
கி.வா.ஜவை  ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா. அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.
கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா. அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார். அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
6. நானா தள்ளாதவன்...?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா. முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.. சொன்னது;
"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.
7. வாயிலில் போடுவேன்..!
கி.வா.. விடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.
அதற்கு, "...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.
கி.வா.. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
8. உள்ளே வெளியே
கி.வா.ஜா தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா. எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா. கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".
9. நாற்காலி மனிதன்
ஒரு முறை கூட்டத்துக்குத் தலைமை தாங்க இருந்தவர் வரவில்லை.கி.வா. அவர்களைத் தலைமைத் தாங்கச் சொன்னார்கள்.கி.வா. மறுத்தார்.”நீங்களே தலைவராக அமரவேண்டும்என்றார்கள் அன்பர்கள்.”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க உங்களுக்கு ஏன் அவ்வளவு ஆசைஎன்று கேட்டார் கி.வா..
10. தொண்டை கட்டு
தமிழ்த் தாத்தா .வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன் மாணவராக இருந்த நேரம்.. ஒருமுறை கி.வா..வை ஒரு பாட்டுப் பாடு என்றார் .வே.சா.

அப்போது கி.வா..வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.. செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை.

'
என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார் .வே.சா!

No comments:

Post a Comment